இலங்கையின் 72 ஆவது தேசிய சுதந்திர தினமாகிய இன்று கொழும்பில் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
கொழும்பு ரயில்வே மத்திய நிலையத்திற்கு முன் இன்றுகாலை இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தை குமார் குணரட்ணம் தலைமையிலான சோசலிஸ மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்தது.
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபா நாள்சம்பளம் அளிக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய வாக்குறுதி அளித்த போதிலும் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் ஜனாதிபதி கூறியபடியே ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கடந்த 5 வருடங்களாக தம்மை ஏமாற்றி பிழைப்பு நடத்திய அரசியல்வாதிகள் தேர்தலில் வாக்குகேட்டு வந்தால் அடித்து துரத்துவோம் என ஊடகங்களிடம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















