இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இருந்து நியூசிலாந்து அணி தலைவர் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.
இந்திய அணி நியூசிலாந்து பயணம் மேற்கொண்டு ஐந்து டி20, 3ஒருநாள் மற்றும் 2டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில், நாளை இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
இந்தியாவுக்கு எதிராக 3வது டி-20போடியின் போது கேன் வில்லியம்சன் தோள்பட்டை காயம் ஏற்பட்டது. அதனால் கடைசி இரண்டு டி20 போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை.
இந்நிலையில், தோள்பட்டை காயம் குணமாகததால், இந்தியவுக்கு எதிராக முதல் 2ஒருநாள் போட்டிகளில் இருந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.
முன்னதாக நியூசிலாந்து அணி டி20 தொடரை முழுமையாக இழந்த நிலையில், கேன் வில்லியம்சன் விலகியிருப்பது அந்த அணிக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எனவே நியூசிலாந்து அணியின் தலைவராக டாம் லாதம் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், வில்லியம்சனுக்கு பதிலாக மார்க் சேப்மேக் சேர்க்கப்பட்டுள்ளார்.