சிரியாவில் எந்தவொரு துருக்கிய ஆக்கிரமிப்பையும் தடுக்க தயாராக இருப்பதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இட்லிப் மாகாணத்தில் செயல்படும் போராளிகள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய கடைசி வாய்ப்பை அளிப்பதாக சிரிய இராணுவ அதிகாரி கூறியதாக மேற்கோள் காட்டி இக்பாரியா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
நமது ஆயுதப்படைகள் போராளிகளுக்கு கடைசி வாய்ப்பை வழங்கவும், பொதுமக்களின் உயிரைக் காப்பாற்றவும் முயற்சிக்கின்றன.
துருக்கியப் படைகளின் ஆதரவை நம்ப வேண்டாம் என்று முடிவு செய்பவர்களை ஆயுதங்களை ஒப்படைக்க அனுமதிக்குமாறு இப்பகுதியில் இயங்கும் இராணுவப் பிரிவுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று சிரிய இராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது.
மேலும், பிராந்தியத்தில் ஆக்கிரமிக்கும் எந்தவொரு துருக்கி படையையும் விரட்ட சிரிய இராணுவம் தயாராக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.
இட்லிப்பின் சரிகப்பில் மற்றும் டெல் டூக்கனில் பொதுமக்களுடன் சண்டையிட்டும், அவர்களை கேடயங்களாக பயன்படுத்தும் போராளிகளுக்கு எதிராக தனது இராணுவ நடவடிக்கையைத் தொடரும் என சிரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 30ம் திகதி, இட்லிபில் சிரிய இராணுவம் நடத்திய தாக்குதலில் 6 துருக்கிய படைவீரர்கள் கொல்லப்பட்டதாக துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிரிய அரசாங்கப் படைகளின் தாக்குதலில் இட்லிப் மாகாணத்தில் அதன் படைவீரர்கள் கொல்லப்பட்ட பின்னர், பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்தது நினைவுக்கூரத்தக்கது.