நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கில் போட தடை விலகுமா என்பது குறித்து புதனன்று வழங்கப்படும் தீர்ப்பில் தெரியவரும்.
நிர்பயா வழக்கில் மரண தண்டனை கைதிகளை தூக்கில் ஏற்ற விசாரணை நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்குமாறு,
மத்திய அரசு மற்றும் திகார் சிறை நிர்வாகம் தாக்கல் செய்த மனு மீது, டெல்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை அன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
குற்றவாளிகள் 4 பேருக்கும் கடந்த ஒன்றாம் திகதி தண்டனையை நிறைவேற்ற கறுப்பு வாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில் குற்றவாளிகளான பவன், வினய். அக்ஷய் ஆகியோரின் சட்ட ரீதியான நிவாரண வழிகள் இன்னும் முடிவடையவில்லை என,
அவர்கள் தரப்பு வழக்கறிஞர் வாதாடியதை அடுத்து மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முதல் நாளான ஜனவரி 31 ஆம் திகதி விசாரணை நீதிமன்றம் தடை விதித்தது.
இதற்கு எதிராக மத்திய அரசும் திகார் நிர்வாகமும் மனு செய்துள்ள நிலையில், நிர்பயாவின் பெற்றோரும் தடையை நீக்கக் கோரி செவ்வாய் அன்று மனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.