கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் தனியார் பேருந்தொன்று மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை ஐந்து மணியளவில் தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 99ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் தனியார் பேருந்தின் உதவியாளர் உயிரிழந்துள்ளதாகவும், சாரதி உள்ளிட்ட இருபதிற்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர் திருகோணமலை பகுதியை சேர்ந்தவர் எனவும், சடலம் தம்பலாகாமம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் சம்பவத்தில் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளோர் தம்பலாகாமம் மற்றும் கந்தளாய் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலாகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




















