யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீட 2017ம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் புதிதாக சேர்ந்த மாணவிகள் மீது கொடூரமான முறையில் ராக்கிங் செய்ய முற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு புதிதாக சேரவுள்ள மாணவிகளின் தொலைபேசி இலக்கங்களிற்கு அழைப்பை ஏற்படுத்தி மிகக் கேவலமான முறையில் உரையாடி வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.
இவர்களின் தொல்லை தாங்காது மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில், அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை மாணவியிடம் விசாரித்த போதே இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல மாணவிகளிடம் 2017ம் ஆண்டு மாணவர்கள் இவ்வாறான கேவலங்களை புரிந்துள்ளதுடன் அம் மாணவியின் தொலைபேசி இலக்கத்திற்கு ஏராளமான தொலைபேசி இலக்கங்களில் இருந்து அழைப்பு வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் குறித்த மாணவர்கள் நாள் தோறும் தொடர்ச்சியாக அழைப்புக்களை ஏற்படுத்தி மாணவிகளிடம் அநாகரிகமான முறையில் பேசுவதாகவும் பாதிக்கபட்ட மாணவியின் தந்தை கூறியுள்ளார்.
இதேவேளை அண்மைக்காலமாக் யாழில் இளம் மாணவிகள் மற்றும் மாணவர்களின் தற்கொலை சடுதியாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இவ்வாறான பல்கலைக்கழக காவாலிகளின் செயற்பாடுகளும் தற்கொலைக்கு துாண்டும் காரணிகளாக அமைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து கவலை வெளியிட்டுள்ள மாணவியின் தந்தை இது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு செல்வதற்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
மேலும் இவ்வாறான மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வேண்டும் எனவும் அதற்காக சமூகநலன்விரும்பிகள் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் எனவும் மாணவியின் தந்தை உருக்கமான வேண்டுகோள் ஒன்றினையும் விடுத்துள்ளார்.
இதேவேளை இவ்வாறான மாணவர்களின் காவாலித்தனங்களால் ஒட்டுமொத்த கல்விசமூகமும் பாதிக்கப்படுவதுடன் , மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த அடாவடியில் ஈடுபடும் காவாலி மாணவர்களின் விபரம் விரைவில் வெளிவரும்