நல்லாட்சி அரசாங்கம் பிரான்ஸின் எயார்பஸ் நிறுவனத்துக்கு கொடுப்பனவு செய்த 98மில்லியன் டொலர்களை நடப்பு அரசாங்கம் அந்த நிறுவனத்திடம் இருந்து மீளப்பெறநடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாமன்ற உறுப்பினர்எரான் விக்ரமரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர்இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
2016ஆம் ஆண்டு நான்கு ஏ 350 விமானங்களை திருப்பிக்கொடுத்தமை தொடர்பில் ரத்துகட்டணமாகவே இந்த தொகை நல்லாட்சி அரசாங்கத்தினால் கொடுப்பனவு செய்யப்பட்டதாகஅவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தற்போது பல்வேறு நாடுகளில் எயார்பஸ் நிறுவனம் பாரிய மோசடிகளில் ஈடுபட்டமைதெரியவந்துள்ளது.
2016ஆம் ஆண்டு நான்கு ஏ350 விமானங்களை திருப்பிக்கொடுத்தமைக்காக ரத்துக்கட்டணமாக2017ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் 98 மில்லியன் டொலர்களை எயார்பஸ் நிறுவனத்துக்குசெலுத்தவேண்டியிருந்தது.
அது பின்னர் செலுத்தப்பட்டது. இதன்போது எயார்பஸ் நிறுவனம் தமது விற்பனை விலையையும் அதிகரித்தது.
எனினும் குறித்த தீர்மானங்கள் சட்டரீதியாக மேற்கொள்ளப்படவில்லை என்பதை அண்மையதகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.
எனவே குறித்த 98 மில்லியன் டொலர்களையும் அந்த நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளஅரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, எரான் விக்ரமரத்ன கோரியுள்ளார்.