புதிய அரசாங்கம் அறிமுகப்படுத்திய வற் வரியை 8 வீதமாக குறைக்கும் நடைமுறைக்கு நாடாளுமன்றத்தின் பொது நிதிக்குழு அங்கீகாரம் வழங்க மறுத்துள்ளது.
வற் என்ற பெறுமதி சேர்த்த வரிச்சட்டத்தின் இலக்கம் 14 இன் கீழ் இந்த நடைமுறைக்குநிதி சார்ந்த நியாயம் தேவை என்று பொது நிதிக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிதிசார்ந்த நியாயம் அடுத்த நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அந்தக்குழு கேட்டுள்ளது.
இதேவேளை குறித்த குழு புகையிலை உற்பத்திகள் மற்றும் புகையிலை மாற்று தயாரிப்புகள்தொடர்பில் அரசாங்கம் கொண்டு வந்த விசேட சட்டத்துக்கும் நாடாளுமன்ற பொது நிதிக்குழு அங்கீகாரம் வழங்க மறுத்துள்ளது.
இந்தநிலையில் இது தொடர்பில் கலந்தாலோசிக்க நிதியமைச்சு, தேசிய புகையிலைஅதிகாரசபை மற்றும் அதிகாரிகள் தமது குழு கூட்டத்துக்கு வருமாறு குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையில் மத்திய வங்கியின் தடயவியல் அறிக்கை தொடர்பில் மத்திய வங்கி தமதுசொந்த கருத்தை வெளிப்படுத்தவேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்தலைமையிலான நாடாளுமன்ற பொது நிதிக் குழு இன்று தீர்மானித்துள்ளது.