நல்லாட்சி அரசின் காலத்தில் அமைச்சர்களிற்கான வாகன கொள்வனவிற்கு செலவான நிதி விபரத்தை அரசு வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பிரதம கொறடா இன்று இதனை தெரிவித்தார்.
2015ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதியில் இருந்து இதுவரை அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களிற்கான வாகன கொள்வனவிற்கு 2.8 பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.