ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்ட நான்கு பேரில் கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்கவை மாத்திரம் மீண்டும் செயற்குழு உறுப்பினராக நியமிக்க அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
ரோசி சேனாநாயக்க உட்பட நீக்கப்பட்ட நான்கு பேரை மீண்டும் செயற்குழுவில் இணைந்துக் கொள்ளும் வரை செயற்குழுக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிபந்தனை விதித்திருந்தார்.
ரோசி சேனாநாயக்க, அஜித் பீ. பெரேரா, சரத் பொன்சேகா, இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் ஆகியோரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க செயற்குழு உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கினார்.
கட்சியின் தலைமையை பகிரங்கமாக விமர்சித்த குற்றச்சாட்டில் இவர்கள் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டனர்.
எவ்வாறாயினும் கடந்த காலம் முழுவதும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்கு நெருக்கமாக செயற்பட்ட கொழும்பு மாநகர மேயரை மாத்திரம் செயற்குழுவில் இணைத்து கொள்ள ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


















