இலங்கையின் முன்னேற்றங்களுக்கு தென்னாசியாவின் மூத்த சகோதரர் (இந்தியா) (elder brother) இடையூறாக இருப்பதாக பாகிஸ்தான் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் மஹ்முட் சாட் கட்டாக் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
தென்னாசியாவின் மூத்த சகோதரர் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளின் கைகளை முறுக்கி வருவதாக கொழும்பில் இடம்பெற்ற கருத்தமர்வு ஒன்றின்போது தெரிவித்துள்ளார்.
இலங்கை சிங்கப்பூரை போன்று வருவதற்கான வாய்ப்புகள் இருந்தன. எனினும் அதனை பிராந்தியத்தின் மூத்த சகோதர் தடுத்து வருகிறார்
இந்த நிலையில் இந்தியா தமது சொந்த அரசியல் அமைப்பையும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை யோசனைகளையும் மீறி வருகிறது.
இதேவேளை இந்தியா காஸ்மீரில் 9 மில்லியன் மக்களை ஒரு மில்லியன் படையினரைக்கொண்டு ஆகஸ்ட் 5, 2019 முதல் அடைத்து வைத்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தினார்.