இலங்கையில் கடற்கரை ஒன்றில் ஜேர்மனியர் ஒருவர் குளித்து கொண்டிருந்த போது நீர் சுழற்சியில் சிக்கி இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவது,
ஜேர்மனை சேர்ந்த சுற்றுலாப்பயணி ஒருவர் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார். அவர் இலங்கையின் Hikkaduwa-வில் இருக்கும் Naarigama கடற்கரைக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு குளித்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக நீர்சுழற்சியில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவரின் பெயர், ஜேர்மனியில் எங்கிருக்கிறார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.