தமிழகத்தில் திருமணம் நாளை கொண்டாடுவதற்காக கணவனுடன் சென்ற மனைவி பரிதாபமாக இறந்த சம்பவம் உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் காகித பட்டறையை சேர்ந்தவர் விக்னேஷ். 30 வயதாகும் இவருக்கும் வினிசைலா(27) என்ற மனைவி உள்ளார். வினிசைலா தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த தம்பதிக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. இவர்களின் திருமண நாள் 7-ஆம் திகதி என்பதால், இரண்டாம் ஆண்டு தினத்தை கொண்டாடுவதற்காக இந்த தம்பதி, குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சுமார் 30 பேருடன் பாலவாக்கம் கடற்கரைக்கு சென்றுள்ளனர்.
அங்கு இரவு 12 மணிக்கு இருவரும் மோதி மாற்றி கொள்வதாக திட்டம் வைக்கப்பட்டிருந்தது. அதன் படி 12 மணிக்கு முன்னர் கேக் வெட்டி விட்டு, இருவரும் கடற்கரையின் தண்ணீர் பகுதிக்கு சென்று, அங்கு கால் நினைத்தபடி அமர்ந்து பேசியுள்ளனர்.
நேரம் சரியாக 12 மணி ஆனதால், வினிசைலா கணவருக்கு மோதிரத்தை அனுவிக்க எடுக்க, அப்போது திடீரென்று எழும்பி வந்த ராட்சத அலையை இவர்கள் கவனிக்காததால், இருவரையும் அலை உள்ளே இழுத்து சென்றது.
இதைக் கண்ட உறவினர்கள் கூச்சலிட, உடனே அங்கிருந்த மீனவர்கள் தண்ணீரில் குதித்தனர். இருப்பினும் விக்னேசை மட்டும் காப்பாற்ற முடிந்தது தவிர, வினிசைலாவை காணவில்லை, அவருக்கு நீச்சல் தெரியும் என்பதால் வந்துவிடுவார் என்று உறவினர்கள் காத்து கொண்டிருந்த போது, இறந்த நிலையில், இன்று அதிகாலை கொட்டிவாக்கத்தில் அவரின் உடல் கரை ஒதுங்கியுள்ளது.
இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டாம் ஆண்டில் தங்களுடைய திருமண நாளை ஆசையாக கொண்டாடிய நிலையில், ஆசையாக கணவனுக்கு மோதிரம் போட வந்த போது, அவர் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடைய மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.