ஓடும் காரில் உறவுக்கார பெண்ணை அழைத்துக்கொண்டு வலுக்கட்டாயமாக கழுத்தில் தாலி கட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் என்ற பகுதியில் மனுகுமார் என்ற நபர், தன் உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளார்.
ஆனால், பெண்ணின் வீட்டில் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மனுகுமார், தையல் வகுப்புக்கு சென்று விட்டு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த இளம் பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்தியுள்ளார்.
அதைத்தொடர்ந்து, ஓடும் காரிலேயே அந்த பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக தாலி காட்டியுள்ளார். இதையடுத்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்காமல் இருக்க காரின் உள்ளே பாட்டு சட்டத்தை ஒலிக்க செய்துள்ளார்கள். மேலும் இந்த கட்டாய திருமணத்தை வீடியோ எடுத்து அதனை மனுகுமார், தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து, வீடியோ வைரலாகியதால் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மனுகுமாரையும், அவரது நண்பர்களையும் கைது செய்தனர்.
தனது மகளுக்கு தனது உறவினர் ஒருவரை கட்டாயப்படுத்தி தாலி கட்டிய சம்பவத்தால் மனமுடைந்த பெண்ணின் தந்தை தற்கொலைக்கு முயன்று தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.