இந்தியாவில் பெற்ற தாயை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு காதலனுடன் ஜாலியாக சுற்றுலாவுக்கு சென்ற மகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரை சேர்ந்தவர் அம்ருதா, ஐடியில் வேலை பார்த்து வருகிறார், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அப்பா இறந்த நிலையில் தாய் நிர்மலா, தம்பி ஹரிசுடன் வசித்து வருகிறார்.
சில வாரங்களுக்கு முன் அம்ருதாவுக்கு பணியிட மாறுதல் கிடைத்ததால் ஹைதராபாத்துக்கு செல்ல முடிவெடுத்தார்.
இந்நிலையில் கடந்த ஞாயிறன்று அதிகாலை அம்ருதாவின் ரூமில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது, இதனால் கண்விழித்த அவரது தம்பி அங்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது அம்ரூதா சர்வசாதாரணமாக தன்னுடைய துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.
இதனால் தன்னுடைய ரூமுக்கு வந்து மீண்டும் ஹரிஷ் தூங்கிவிட, சிறிது நேரத்தில் கத்தியுடன் வந்த அம்ரூதா கழுத்தில் தாக்கியதுடன் பலமாக அடித்துள்ளார்.
இதில் ஹரிஷ் இறந்துவிட்டதாக நினைத்து, அம்மா நிர்மலாவையும் கொன்றுவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.
உயிர்போகும் நிலையில் ஹரிஷ் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதன்பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது, அம்ரூதா நபர் ஒருவருடன் பைக்கில் சென்றது கண்டறியப்பட்டது.
யார் அவர்? இருவரும் எங்கு சென்றார்கள் என விரிவாக விசாரணை நடத்திய போது தான், அம்ரூதாவின் காதலன் என்பதும், அந்தமானுக்கு இன்ப சுற்றுலா சென்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து அம்ரூதாவை கைது செய்து விசாரணை நடத்தியதில், தன் தந்தையின் இழப்பாமல் மனமுடைந்து போயிருந்ததாய், அம்மா, தம்பியை கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்ள நினைத்ததாகவும், அதற்கு முன்னர் காதலுடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று என்பதை கண்டறிந்துவிட்ட பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.