5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரனை பொதுமக்கள் நிர்வாணப்படுத்தி, அடித்துள்ள வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹரியானா மாநிலத்தில் இருக்கும் அம்பாலா நகரில் 5 வயது சிறுமியை கொடூர இளைஞன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இந்த சம்பவத்தை கண்ட அப்பகுதி பெண்கள் ஒன்று திரண்டு அந்த இளைஞரை அடித்து நிர்வாணப்படுத்தியுள்ளனர்.
மேலும், ஆண்களை விட பெண்களே இந்த கொடூரனுக்கு தண்டனை கொடுத்துள்ளனர். இந்தியா முழுவதும் பாலியல் பலாத்காரம் தொடர்பான பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.
இந்த விஷயத்தில், ஆண்கள் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த நிலையில், பெண்கள் தைரியமாக முன்வந்து கொடூரனை அடித்து நொறுக்கி சம்பவம் இணையத்தில் பலரால் பேசப்பட்டு வருகிறது.
ஹரியானா மாநிலம் அம்பாலா நகரில் 5 வயது பச்சிளம் பெண் குழந்தை பாலியல் பலாத்காரம்…. நிர்வாணமாக்கி அடித்து நொறுக்கிய பெண்கள்…. pic.twitter.com/G5G82zQ3iV
— Sriramrpckanna (@Sriramrpckanna1) February 8, 2020