நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன்படி காலி மாத்தறை மாவட்டங்களிலும், சப்ரகமுவ மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை பெய்யும் என்று வானிலை அவதான மையம் அறிவிக்கின்றது.
மிதமான மழை கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பெய்யக்கூடும். ஏனைய இடங்களில் வரட்சி நிலையே தொடரும்.
காற்றின் வேகம் வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.
மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் பனி படர்ந்த வானிலை காலை வேளையில் நிலவும்.
கடலில் முல்லைத்தீவு – ஹம்பாந்தோட்டை ஊடாக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் சுமாரான நிலையே இருக்கும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.