பொலநறுவையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை ஆயுதங்கள் அதிரடி படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அரலகங்வில, 503, கும்புறுயாய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 துப்பாக்கிகள், 3 மெகசின்கள் மற்றும் 135 ரவைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
உரப்பை ஒன்றில் இடப்பட்டு கால்வாய் ஒன்றுக்குள் போடப்பட்டிருந்த நிலையில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த ஆயுதங்கள் தொடர்பில் மன்னப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் இன்று அறிக்கை சமர்ப்பித்த பின்னர் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.