அரசாங்கத்துடனான பேச்சு வார்த்தைகளுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அக்கறை காட்டவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமது அரசாங்கம் தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி செய்த போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைவர் ஆர். சம்பந்தனும் அதற்கு அக்கறை செலுத்தாமல் தமிழ் மக்களை பாதாளத்திற்கு கொண்டு செல்வதாகவும் அவர் இந்திய விஜயத்தின் போது தெரிவித்துள்ளார்.