இலங்கையில் பட்டதாரிகளை மாத்திரம் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள சமகால அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2027ஆம் ஆண்டில் இருந்து இந்த நடைமுறை அமுலாகும் என அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைய இலங்கை கல்வி துறையில் சீர்திருத்தம் செய்யப்படவுள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய இலங்கை கல்வித்துறையில் பாரிய புரட்சி ஒன்று ஏற்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் 10 ரக ஆசிரியர்கள் உள்ளனர். உலகில் வளர்ச்சி அடைந்த நாடுகள் மற்றும் கல்வித்துறையில் பட்டதாரிகளை தவிர வேறு எவரையும் ஆசிரியர் துறைக்கு இணைத்துக் கொள்ளப்படுவதில்லை.
இலங்கையிலும் 7 வருடங்களின் பின்னர் பட்டதாரிகள் மாத்திரமே ஆசிரியர் துறையில் இணைத்துக்கொள்ளப்படுவர் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


















