புதிய கூட்டணியின் பொதுச்செயலாளர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாவவுக்கு கொடுத்தமையிட்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அணி கடும் எதிர்ப்பை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அமைக்கப்படும் கூட்டணியில் சின்னம் மற்றும் பெயர் என்பன இன்று தீர்மானிக்கப்படுகின்றன.
இதற்காக கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடவுள்ளது.
இதேவேளை கடந்த முறை செயற்குழுவை புறக்கணித்து சென்ற சஜித் அணியும் இன்று கலந்துகொள்ள உள்ளது.
இதன்போதே ரணில் அணி, மேற்படி நியமனத்திற்கு எதிர்ப்பை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் குறித்த பதவிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸ்ஸநாயக்கவை நியமிக்க கட்சியின் தலைவர் ரணில் உத்தேசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.