தென் ஆப்பரிக்காவில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியின் போது வங்கதேச பந்து வீச்சாளர் இந்திய துடுப்பாட்டகாரரின் தலையை குறிவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்திய வங்கதேச 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணி, வரலாற்றில் முதன் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
நாணய சுழற்சியில் வென்ற வங்கதேச அணி முதல் பந்து வீச முடிவு செய்தது. அதன் படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இரண்டாவது ஓவரை வீசிய வங்கதேச வீரர் டான்சிம் ஹசன் சாகிப் , இந்திய வீரர் திவ்யான்ஷ் சக்சேனாவை தலையில் தாக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
டான்சிம் வீசிய பந்தை சக்சேனா நேராக அடித்தார். பந்தை பிடித்த சாகிப் ஸ்டம்புகளை நோக்கி வீசினார், ஆனால் அது கிட்டத்தட்ட சக்சோனாவின் தலையை நோக்கி சென்றது.
https://www.facebook.com/watch/?v=183904466208131
சுதாரித்துக்கொண்ட அவர் உடனே கீழே குனிந்த தப்பித்துக்கொண்டார். இதனையடுத்து, டான்சிம்-சாக்சோனா இடையே காரசார விவாதம் நடைபெற்றது. எனினும், களநடுவர்கள் தலையிட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.