19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வங்கதேசம் வென்ற நிலையில் மைதானத்திலேயே இந்தியா – வங்கதேசம் வீரர்கள் மோதி கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதின. இதில் வங்கதேசம் வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றியது.
இதோடு இறுதிப் போட்டிக்குள் நுழைந்த முதல் முறையிலேயே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வங்கதேசம் சாதனை படைத்துள்ளது.
வங்கதேச அணி வெற்றி பெற்றவுடன் அந்த அணி வீரர்கள் மைதானத்திற்குள் ஓடி வந்து வெற்றியை கொண்டாடினர். அப்போது எதிர்பாராத விதமாக இரு அணியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இந்திய அணி பயிற்சியாளர் ஓடி வந்து இந்திய அணி வீரர்களை சமாதானப்படுத்தினார்.
Shameful end to a wonderful game of cricket. #U19CWCFinal pic.twitter.com/b9fQcmpqbJ
— Sameer Allana (@HitmanCricket) February 9, 2020
எனினும் மோதல் கட்டுப்படவில்லை. வாக்குவாதம் அதிகமானதை அடுத்து அதிகாரிகள் பலரும் மைதானத்திற்குள் வந்து இரு அணி வீரர்களையும் எச்சரித்து அப்புறப்படுத்தினர். இந்த மோதலால் மைதானத்தில் சில நிமிடங்கள் பரபரப்பானது.
வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வங்கதேச வீரர்கள், இந்திய வீரர்களை கடும் வார்த்தைகளால் கேலி செய்ததாகவும், அதனால், மோதல் ஏற்பட்டது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.