கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையின் ஏறாவூர் நகர்ப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் சுங்கான்கேணி, வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த நீர்ப்பாசனத் திணைக்கள உத்தியோகத்தரான விஜயரட்ணம் ரமேஷ் என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
இதன்போது படுகாயமடைந்தவர் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளினை செலுத்தியமையே விபத்திற்கான காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் வீதி போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.