சீனாவின் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இடங்கள் உட்பட ஏனைய பகுதிகளில் இருந்து இலங்கைக்குள் வந்த சுமார் 1600 பேர் பொது சுகாதார பரிசோதகர்களால் நாடளாவிய ரீதியில் கண்காணிப்பட்டுள்ளனர்.
இதனை தொற்றுநோய் தடுப்பு பிரிவின் தலைவர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
சீனாவில் இந்த தொற்று ஏற்பட்டிருந்த இடங்களில் இருந்து சுற்றுலாப் பணியகத்தில் இலங்கையில் தொழில்புரிவோரும் வந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் பொது சுகாதார பரிசோதகர்களால் உன்னிப்பாக கண்காணிப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுளளார்.
இதுவரை சந்தேகத்துக்குரிய 15 பேர் சிகிச்சை வழங்கப்பட்டு வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் சிகிச்சை வழங்கப்பட்ட சீன பெண் இன்னும் வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றார்.
எனினும் அவரை வைத்தியசாலையில் இருந்து விடுவிப்பதற்கான தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார்.