பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை நண்பர் என்று அழைப்பதில் பெருமிதம் கொள்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இருவரும் இப்போது தலைமைப் பதவியிலிருந்து விலகத் தயாராகி வரும் நிலையில் பைடன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் ட்ரூடோ அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ட்ரூடோவுடன் தாம் தொலைபேசியில் பேசியதாக பைடன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் இரண்டாவது தடவையாக தனது பதவியை பொறுப்பேற்கும் போது ஜனாதிபதி பைடன் இந்த மாத இறுதியில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற உள்ளார்.
தாம் ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் ட்ரூடூ முதலில் வாழ்த்து கூறியதாக பைடன் நினைவுபடுத்தியுள்ளார்.
காலநிலை மாற்றம் கோவிட்19 பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு சவால்களை தாம் இருவரும் இணைந்து எதிர்கொள்ள நேரிட்டதாக பைடன் தெரிவித்துள்ளார்.