கனடா பிரதமர் ஜஸ்டின்ட்ரூடோ தனது இராஜினாமாவை விரைவில் அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடாவின் ஆளும் லிபரல் கட்சியின் தலைமை பதவியிலிருந்து விலகுவது குறித்த அறிவிப்பை அவர் இன்று வெளியிடுவார் எனகுளோப் அன்ட் மெயில் தெரிவித்துள்ளது.
எனினும் இது குறித்து இன்னமும் இறுதி முடிவை எடுக்கவில்லை இது குறித்து தீவிரமாக சிந்திக்கின்றார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஒன்பது வருடகாலம் கனடா பிரதமராக ஜஸ்டின்ட்ரூடோ பதவி வகித்துள்ளார். அதேவேளை வரும் ஒக்டோபரில் கனடாவில் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகினால் அது லிபரல் கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கருத்துக்கணிப்புகள் லிபரல் கட்சி மோசமான தோல்வியை சந்திக்கும் என தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர் குறிப்பிட்டுள்ளது.
கருத்துக்கணிப்புகள் லிபரல் கட்சி தோல்வியடையும் என தெரிவிக்கின்ற சூழ்நிலையில் கட்;சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பிரதமர் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.
ட்ரூடோ நிச்சயமாக பதவி விலகுவது நிச்சயம் என தெரிவிக்க முடியாது என குளோப் அன்ட் மெயிலிற்கு தெரிவித்துள்ள அரசியல் வட்டாரங்கள் புதன்கிழமை லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவசர கூட்டத்திற்கு முன்னதாக இது குறித்த அறிவிப்பு வரலாம் என தெரிவித்துள்ளன.
அதேவேளை புதிய பிரதமர் தெரிவு செய்யப்படும வரை ட்ரூடோ பதவியில் நீடிப்பாரா என்பது தெரியவில்லை என குளோப் அன்ட் மெயில் தெரிவித்துள்ளது.
வரவு செலவு திட்டப்பற்றாக்குறை
. லிபரல் கட்சி மிக மோசமான நிலையிலிருந்த காலத்தில் – நாடாளுமன்றத்தில் மூன்றாவது இடத்திலிருந்த காலத்தில் 2103 இல் ட்ரூடோ கட்சியின் தலைமை பதவியை ஏற்றார்.
அதோடு , கனடாவிற்கு இணக்கமான அரசியல் அணுகுமுறையையும் அறிமுகப்படுத்துவதாகவும் பெண்களின் உரிமையை மேம்படுத்துதல் மற்றும் காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்வதற்கான போராட்டம் போன்ற வாக்குறுதிகளை முன்வைத்தும் ஜஸ்டின் ட்ரூடோ 2015 இல் லிபரல் கட்சியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றார்.
ஆனால் ஆட்சியின் ஒவ்வொரு நாள் யதார்த்தம் ஏனைய மேற்குலக தலைவர்களை போல இவரையும் சோர்வடையச்செய்ததுடன், கொரோனா பெருந்தொற்றை சமாளிப்பதற்கான ட்ரூடோ தனது நேரத்தின் பெரும்பகுதியை செலவிடவேண்டிய நிலை உருவானது.
நுகர்வோரையும் வர்த்தக சமூகத்தினரையும் காப்பாற்றுவதற்காக லிபரல் கட்சி பல நடவடிக்கைகளை எடுத்த போதிலும் வரவு செலவு திட்டப்பற்றாக்குறை அதிகரித்து வந்தது,விலைகள் அதிகரித்ததால் பொதுமக்களின் கோபத்திற்கு ஆளானார்.
எதிர்வரும் தேர்தல்களில் கட்சி தோல்வியடையலாம் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமீபகாலமாக வெளியிட்டு வந்த அச்சத்தினை அவர் சமாளித்துவந்துள்ளார்.
இதேவேளை ட்ரூடோவின் நெருங்கிய சகாவான நிதியமைச்சரின் பதவி விலகலை தொடர்ந்து பிரதமரும் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.