ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக, சஜித் பிரேமதாஸ உட்பட குழுவினர் அங்கிருந்து கோபமாக வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியின் முன்னயை செயற்குழு கூட்டங்களை சஜித் தரப்பினர் புறக்கணித்த போதிலும், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் நேற்றைய தினம் அவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது புதிய கூட்டணியின் சின்னம் மற்றும் பெயர் உட்பட விடயங்கள் தொடர்பில் ரணில் தரப்பினர் தனித்தீர்மானத்தை அறிவிக்க ஆரம்பித்தமையினால் குழப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது.
கூட்டணியின் தலைமைத்துவம் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பு தனக்கு வழங்கப்பட்டால் தனக்கு அவசியமான முறையில் செயற்படுவதற்கு இடமளிக்குமாறு சஜித் இதன் போது தெரிவித்துள்ளார்.
தனக்கு மக்கள் மத்தியிலுள்ள செல்வாக்கை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான நிறைவேற்றிக் கொள்வதே ரணில் தரப்பின் அவசியமாகியுள்ளதென கூறிய சஜித், கோபமாக அவ்விடத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என்றால், ஐக்கிய தேசிய கட்சி இரண்டாக பிளவுப்படுவது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.