யாழ் பிராந்தியத்தின் பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக மனோஜ் ரணகல பதவியேற்றுள்ளார்.
மும் மத தலைவர்களிள் ஆசீர்வாதத்துடன் பதவியேற்பு நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.
கொழும்பு மத்திய பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய மனோஜ் ரணகல, இடமாற்றலாகி யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பதவியேற்றுக்கொண்டார்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் கடமையாற்றியவர் தற்போது கொழும்புக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.