கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையிலும் சீன மக்கள் இன்னும் சாக்கடை வடிகாலிருந்து தயாரிக்கப்படும் மிகக் தரம் குறைந்த எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவது வெளிச்சத்திற்கு வந்து அதிரவைத்துள்ளது.
கொரோனா வைரஸை தீவரத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கடல் உணவு சந்தையில் வெளவால்கள் இறைச்சியாக வர்த்தகம் செய்யப்படவில்லை என்று கண்டறியப்பட்டது.
எனவே, அறியப்படாத மற்றொரு விலங்கு, கொரோனா வைரஸை வெளவால்களிலிருந்து மனிதர்களுக்கு பரப்புவதற்கு வசதி செய்துள்ளது என ஆராச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் மிகக் தரம் குறைந்த எண்ணெய்க்கும் கொரோனா வைரஸிக்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாலும், அசுத்தமான எண்ணெயைப் பயன்படுத்துவதற்கான சட்டவிரோத நடைமுறை சீனாவில் நீண்டகால உணவுப் பாதுகாப்பு கவலையாக உள்ளது.
அங்கு உணவகங்கள் மற்றும் இறைச்சிக் கூடங்களுக்கு அருகிலுள்ள வடிகால்களில் இருந்து பெறப்படும் எண்ணெய் மற்றும் இறைச்சி கழிவுகள் மீண்டும் செயலாக்கப்பட்டு அதிலிருந்து எண்ணெய் தயாரிக்கப்படுகின்றன.
இந்த தரம் குறைந்த எண்ணெய் சீனா முழுவதும் பல ஆண்டுகளாக பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த தரம் குறைந்த எண்ணெய் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததது என சீன ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மேலும், பக்க விளைவுகளுடன் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் புற்றுநோய், இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என அறிவுறுத்தியது.
|இந்த எண்ணெய் தயாரிக்கும் மற்றும் பயன்படுத்துவோருக்கு கடுமையான அபராதத்தை பொலிஸ் அறிவித்திருந்த போதிலும், நாட்டில் 10% சமையல் எண்ணெய் இன்னும் மறுசுழற்சி கழிவுகள் தயாரிக்கப்படுகிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது
தரம் குறைந்த எண்ணெய் சேகரித்து மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்கும் என சமீபத்தில் பொதுபாதுகாப்பு அமைச்சகம் சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
எனினும், சாக்கடை வடிகாலிருந்து எடுக்கப்படும் கழிவுகளை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்படும் எண்ணெயை பல உணவகங்கள் சட்டவிரோதமான இன்னும் பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.