இலங்கைக்கு போலி பாஸ்போர்ட்டில் செல்ல முயன்ற புத்த மத துறவிகள் உடையில் இருந்த 2 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு செல்லும் விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது புத்த மத துறவிகள் உடையில் இந்திய பாஸ்போர்ட்டில் டூடுல் (24), மின்டொ (26) ஆகியோர் இலங்கை செல்வதற்காக வந்தனர்.
அவர்களிடம் இருந்த பாஸ்போர்ட்டை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தபோது அவை போலியானது என தெரியவந்தது.
விசாரணையில், வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்களான டூடுல் 2007-ம் ஆண்டும், மின்டொ 2019-ம் ஆண்டும் இந்தியா வந்துள்ளனர்.
2 பேரும் வடமாநிலங்களில் தங்கி உள்ளனர். பின்னர் போலி பாஸ்போர்ட்டைன நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இருவரும் வங்க தேசத்திலிருந்து சட்ட விராதமாக ஊடுருவி வடமாநிலங்களில் தங்கியுள்ளனர். பின்னர் போலி பாஸ்போர்ட் பெற்று அவர்கள் கொழும்பு விமானம் மூலம் இலங்கை செல்ல முயன்றனர்
மேலும் தங்கள் பாஸ்போர்ட்டில் ஏதாவது ஒரு நாட்டின் குடியுரிமை முத்திரை இருந்தால் ஐரோப்பிய நாட்டுக்கு சென்று தங்கிவிடலாம் என்று இருவரும் திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் மேல் விசாரணைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதையடுத்து இருவருக்கும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.