2020 ஜனவரி மாதம் ஈராக்கில் அமெரிக்க தளத்தின் மீது ஈரான் தாக்குதலுக்குப் பின்னர் டிபிஐ எனப்படும் மூளைக் காயங்களால் பாதிக்கப்பட்ட அமெரிக்க படைகளின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இத்தாக்குதலில் 64 பேர் காயமடைந்ததாக பென்டகன் அறிவித்திருந்த நிலையில் தற்போது எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்கர்கள் யாரும் காயமடையவில்லை என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆரம்பத்தில் கூறினார்.
ஈரானிய தளபதி சுலைமானியை அமெரிக்கா கொன்றது தொடர்பான பதட்டங்களுக்கு மத்தியில் ஜனவரி 8 அன்று இத்தாக்குதல் நடந்தது.
காயமடைந்த வீரர்களில் கிட்டத்தட்ட 70% பேர் கடமைகளுக்குத் திரும்பியுள்ளனர் என்று பென்டகன் தனது ஜனவரி வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியது.
இந்நிலையில், தற்போது ஈரான் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது.
இது தவிர்க்க முடியாதது, காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சையளிக்க எங்களிடம் திட்டம் உள்ளது என அமெரிக்க குடியரசுக் கட்சியின் எம்.பி ஜோனி எர்ன்ஸ்ட் கூறினார்.
ஈராக்கில் குண்டுவெடிப்பு காயங்களுக்கு ஆளாகக்கூடிய எங்கள் படைகளின் பாதுகாப்பையும் பராமரிப்பையும் உறுதிப்படுத்த நான் பென்டகனுக்கு அழைப்பு விடுத்துள்ளேன் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
போர் பகுதியில் டிபிஐ-க்கள் பொதுவானவை என்று அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. குண்டு வெடிப்பு காரணமாக வீரர்களுக்கு டிபிஐ-இன் பாதிப்பு ஏற்படுவதாக அமெரிக்க பாதுகாப்பு மற்றும் படைவீரர்களின் மூளை காயம் மையம் குறிப்பிட்டுள்ளது.
அவை லேசான, மிதமான, கடுமையான அல்லது ஊடுருவி என வகைப்படுத்தப்படுகின்றன. லேசான டிபிஐ மூளையதிர்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் இது ஒரு குண்டுவெடிப்பின் வளிமண்டல அதிக அழுத்தம் மற்றும் அதன்பிறகு குறைந்த அழுத்தம் அல்லது வெற்றிடத்தால் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது..
அமெரிக்க அரசாங்கத்தின்படி, 2000 முதல் சுமார் 4,00,000 க்கும் மேற்பட்ட வீரர்கள் டிபிஐ நோய் கண்டறியப்பட்டுள்ளன.