நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேராவை ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயற்குழுவுக்கு மீண்டும் நியமிக்க முடியாது என்று கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
எனினும் ரோஸி சேனநாயக்க, இம்தியாஸ் பாக்கீர்மாக்கார் மற்றும் சரத் பொன்சேகா ஆகியோரை மீண்டும் செயற்குழுவில் இணைத்துகொள்வதில் ஆட்சேபனை இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று கட்சியின் செயற்குழு கூடியபோது அஜித் பெரேரா உட்பட 4 பேரையும் செயற்குழுவில் இணைக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் வழங்கிய ரணில் விக்ரமசிங்க, அஜித் பெரேரா கட்சியின் தலைமைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டார் என்று குற்றம் சுமத்தினார்.