வரலாற்றில் என்றும் நடக்காத வகையில் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் மக்களின் பெரும் ஆதரவுடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறுவது உறுதி என ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டி ஹரிஸ்பத்துவையில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் அதிகார சபைக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நடந்த தவறை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்வார்கள். அந்த தவறை திருத்துவதற்காக கண்டி மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம்களின் பெரும்பான்மையானவர்கள் பொதுஜன பெரமுனவை ஆதரிப்பார்கள் என நம்புகிறேன். குறிப்பாக கண்டி மாவட்டத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ள பிரபலமான சிரேஷ்ட முஸ்லிம் வேட்பாளரான பாரீஸ் வெற்றி பெறுவார்.
அதேபோல் கண்டி மாவட்டத்தின் ஹாரிஸ்பத்துவை தொகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று வெற்றி பெறும் எனவும் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
இந்த அதிகார சபைக் கூட்டத்தில் நாமல் ராஜபக்ச, அனுராத ஜயரத்ன ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.