ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம், தற்போது சட்டமா அதிபருக்கும் பொலிஸ் பதில் அதிபருக்கும் இடையில் இடம்பெறும் சட்டமுரண்பாடுகளில் தலையிடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பந்துல குணவர்த்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும், நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பில் நீதிபதியை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணித்திருந்தார்.
எனினும் அதனை பொலிஸ் பதில் அதிபர் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சுமத்தி சட்டமா அதிபர் கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே இந்த பிரச்சினையில் அரசாங்கம் தலையிடப் போவதில்லை என்று பந்துல தெரிவித்துள்ளார்.