தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
EPRLF எனப்படும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பெயர் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியாக மாற்றப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
EPRLF கட்சியின் பெயர் மாற்றப்பட்டாலும் சின்னம் மாற்றப்படவில்லை எனவும், சின்னத்தை மாற்றுவதாயின் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் மாற்ற முடியும் எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதி ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்தார்.
இதேவேளை, கட்சியின் பெயரை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக EPRLF கட்சியின் பெயரை தமிழ் மக்கள் தேசிய கூட்டணியாக மாற்றியுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
எனினும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியை புதிய கட்சியாக பதிவு செய்வதற்கான முற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.