விடுதலை புலிகள் அமைப்பு புத்துயிர் பெற வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறிய சம்பவம் தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரை சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கவில்லை என பொலிஸ் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
இந்த முறைப்பாடு கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று அழைக்கப்பட்ட போது, விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு குறித்த ஆவணங்கள் அனைத்தும் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் விசாரணை பிரிவு நீதிமன்றில் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், சட்டமா அதிபரின் ஆலோசனை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர்.
அதன்படி, இந்த முறைப்பாட்டை எதிர்வரும் ஜூலை மாதம் 3 ஆம் திகதி அழைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதேபோல், குறித்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை உடனடியாக பெற்றுக கொடுக்குமாறு சட்டமா அதிபருக்கு நினைவூட்டல் ஒன்றை அனுப்புவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.