கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட , 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அண்மைக்காலமாக இயற்கை வளத்தை சுரண்டும் நோக்கில் கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
இந்நிலையில் அதனை தடுத்து நிறுத்த அதிகாரிகள் பலவிதமான முயற்சிகள் எடுத்தபோதும் அதனை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடு குளம் அண்மித்த நாச்சிகுடா பகுதியில் நேற்று மாலை சட்டவிரோதமாக மணல் அகழ்வு ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு உழவு இயந்திரதிரம் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தருமபுரம் பொலீஸ் பொறுப்பதிகாரி கின்சிலி கேரத் தலைமையிலான குழுவினர் உட்பட சார்ஜன் தர்மசேன, கான்ஸ்டபிள் ரஜீவன், சதீசன் உள்ளிட்டவர்களின் சுற்றிவளைப்பில் குறித்த நபர்கள் கைதாகியுள்ளனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.