இந்தியாவில், காதலர் தினத்தை காதலியுடன் கொண்டாடிய கணவனை மனைவி கையும் களவுமாக பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதிலும் இன்று காதலர் தினம் கொண்டாப்படுவதால், காதலர்கள் ரோஜா, சாக்லெட், பரிசுப் பொருட்கள் என்று தங்கள் அன்பை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் பீகாரில் காதலியுடன், காதலர் தினத்தை கொண்டாடிய கணவனை, மனைவி கையும் களவுமாக பிடித்துள்ளார்.
இன்று காலை தலைநகர் பாட்னாவில் உள்ள பைலே சாலையில், தனது கணவர், வேறு ஒரு பெண்ணுடன் இரு சக்கர வாகனத்தில் செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனால் கணவனை விரட்டி சென்று மனைவி பிடித்ததால், காதலி மற்றும் மனைவி இருவருக்குமிடையே சிக்கி தவித்துள்ளார். அப்போது மனைவி ஆக்ரோசமாக சண்டை போட்டதால், அருகில் இருந்த பொலிசார் இதைக் கண்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அப்போது மனைவி பொலிசாரிடம், மூன்று ஆண்டுகளுக்கு முன் எங்களுக்கு திருமணம் ஆனது. 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் வரை மகிழ்ச்சியாகத்தான் இருந்தோம். பின்னர் அவர் தன்னை மாற்றிக்கொண்டார் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து கணவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, காதலர் தினம் என்பதால் தனது காதலியை வெளியே அழைத்துச் சென்றதாக கூற, இவர்களின் சண்டை தீர்ந்தபாடில்லை.
பொலிசார் உடனடியாக மூவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர்.கணவர், மனைவி இருவரும் சமாதானப் போக்கிற்கு வரவில்லை என்றால், மனைவியின் புகாரின் அடிப்படையில் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று பொலிசார் எச்சரித்துள்ளனர்.
அதன் பின் இறுதியில் என்ன நடந்தது என்பது குறித்து தெரியவில்லை.