மக்கள் தற்போது ஏற்றுக்கொண்டுள்ள சின்னத்திலேயே எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து போட்டியிடும் என அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கண்டியில் வைத்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அமைச்சர் சமல் ராஜபக்ச கண்டியில் நேற்று மல்வத்து மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரை சந்தித்து ஆசிப் பெற்றுக் கொண்டார்.
இதன் பின்னர் அஸ்கிரிய மாநாயக்கர் வராகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்து ஆசிப் பெற்றுக்கொண்டுள்ளார்.