ஜோதிட சாஸ்திரதின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க நேர்மறை, எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும் என்று குறிப்பிடப்படுகின்றது.
அந்தவைகையில், புத்தாண்டில் பல்வேறு கிரகங்களின் சேர்க்கையால் அரிய பல ராஜ யோகங்கள் உருவாக இருப்பதாகவும் அதனால் 12 ராசிகளும் பெருமளவிலான சாதக பலன்களை பெறவுள்ளதாகவும் ஜோதிட நிபுணர்கள் கணித்துள்ளனர்.
குறிப்பாக 2026 ஆம் ஆண்டின் ஜனவரி நடுபகுதியில் சரியாக 15ஆம் திகதி சுக்கிரனும் சனியும் இணைவதால், லாப திருஷ்டி யோகத்தை உருவாகவுள்ளது.
குறித்த அரிய கிரக சேர்க்கையானது குறிப்பிட்ட சில ராசியினருக்கு பெருமளவான சாதக பலன்களை கொடுக்கப்போகின்றது. திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிகள் எவையென இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
சுக்கிரன் மற்றும் சனியால் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் 2026 இல் பல்வேறு வகையிலும் சாதக பலன்களை அனுபவிப்பார்கள்.
இவர்களின் நீண்ட கால கடின உழைப்பிற்கு இந்த ஆண்டில் நிச்சயம் பலன் கிடைக்கும். இவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியடைய அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
திருமண உறவில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகள் சுமுகமாக முடிவுக்கு வரும். பொருளாதார ரீதயில் 2026 ஆம் ஆண்டு இவர்களுக்கு உச்ச பலன்களை கொடுக்கும். பணவரவு எதிர்பார்ப்பை விட அதிகமாக இருக்கும்.
மிதுனம்
குறித்த லாப திருஷ்டி யோகத்தால் மிதுன ராசிகாரர்கள் 2026ல் நிதி ரீதியில் பல்வேறு அதிர்ஷ்ட பலன்களை பெறவுள்ளனர்.
ஏற்கனவே இவர்கள் செய்திருந்த முதலீடுகள் நல்ல லாபத்தை கொடுக்கும். அனைத்து துறைகளிலும் மகத்தான வெற்றி இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்கும். இவர்களின் தொழில் ரீதியான அனைத்து முயற்சிகளும் வெற்றியை கொடுக்கும் வாயப்பு காணப்படுகின்றது.
துலாம்
லாப திருஷ்டி யோகமானது துலாம் ராசிக்காரர்களில் விபாரத்தில் இருப்பவர்களுக்கு அமோகமாக லாபத்தை கொடுக்கப்போகின்றது.
புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டும் என நீண்ட காலமாக போராடி வந்தவர்கள் மனதுக்கு பிடித்த தொழிலை ஆரம்பிப்பதற்கான யோகம் கூடிவரும்.
மொத்தத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு 2026ஆம் ஆண்டு ஒரு அதிர்ஷ்டகரமான ஆண்டாக அமையப்போகின்றது.
கும்பம்
சுக்கிரன் மற்றும் சனியால் உருவாகும் இந்த லாப திருஷ்டி யோகத்தால் கும்ப ராசியினர் தொழிலில் கொடிக்கட்டி பறக்கப்போகின்றார்கள். பொருளாதாரம் இந்த காலகட்டத்தில் உச்சத்தில் இருக்கும்.
தொழிலில் இருப்பவர்களுக்கு லாபகரமாக துறையில் முதலீடு செய்வதற்கான யோகம் கூடி வரும். புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான யோகம் கூடி வரும்.
குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய விடயங்களில் ஆர்வம் காட்டும் வகையில் உடல் நிலையும் புத்துணர்வுடன் இருக்கும்.




















