பிறக்கவிருக்கும் 2026ஆம் ஆண்டில் நடக்கப் போகும் தீர்க்க தரிசனங்கள் பற்றி தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருப்பார்கள். உலக அளவில் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் விடயங்களை தீர்க்கதரிசி பாபா வாங்கா பல ஆண்டுகளுக்கு முன்னரே கணித்துள்ளார்.’
அந்த வகையில் பாபா வங்காவின் கணிப்பு படி 12 ராசிகளில் பிறந்தவர்களில் குறிப்பிட்ட நான்கு ராசிக்காரர்கள் அடுத்த 2026ம் ஆண்டில் அதிர்ஷ்டசாலிகள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
எனவே பாபா வாங்காவின் கணிப்பின்படி, 2026ஆம் ஆண்டில் பொன் பொருள் செல்வம் என அனைத்திற்கும் குறைவின்றி வாழப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை பதிவில் பார்க்கலாம
மேஷம்
- பிறக்கவிருக்கும் 2026-ல் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தான். இதனால் அவர்கள் எடுக்கும் காரியம் ஒவ்வொன்றும் வெற்றியில் முடியும்.
- அவர்களின் மன உறுதி, கடின உழைப்பு மற்றும் புதிய திட்டங்கள் அவர்களின் நிதி ஆதாயங்களைக் உயர்த்தும்.
- இந்த ஆண்டு பெரும் சாதனைகள் மற்றும் அதிர்ஷ்டமும் தேடிவரும் ஆண்டாக 2026 ஆண்டு அமையும்.
- குறிப்பாக வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பான வருடமாக இருக்கும்.
ரிஷபம்
- சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்கு 2026 ஆம் ஆண்டு நிதிரீதியாக மிகவும் அதிர்ஷ்டமான மற்றும் வெற்றிகரமான ஆண்டாக இருக்கும்.
- 2025ம் ஆண்டில் அவர்கள் அனுபவித்த அனைத்து போராட்டங்களும் 2026 முடிவுக்கு வரும், அவர்களின் கடின உழைப்புக்கான பலன்கள் இறுதியாக இந்த ஆண்டு முழுமையாக கிடைக்கும்.
- ஆண்டின் தொடக்கத்திலும், ஏப்ரல் மாதத்திற்கு பிறகும் அவர்களின் வங்கி கணக்கில் அபரிமிதமான வளர்ச்சியுடன், அவர்கள் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சங்களை எட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாம்.
மிதுனம்
- பாபா வாங்கா கணிப்பு படி கிரகங்களின் இளவரசரான புதனால் ஆளப்படும் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கை 2026-ல் பிரகாசமாக இருக்கபோகிறது எனப்படுகின்றது.
- அவர்களின் புத்திசாலித்தனமான திட்டமிடலும், செயல்பாடுகளும் 2026-ல் அவர்களுக்கு அபரிமிதமான நிதிப் பலன்களைப் பெற்றுத் தரும். தொழில் வாழ்க்கை மற்றும் சமூகத் தொடர்புகள் விரிவடையும்.
- புதிய முயற்சிகளைத் தொடங்க அல்லது முதலீடுகளைச் செய்ய இது ஒரு சிறந்த ஆண்டு.
- உங்களின் சூழ்நிலைக்கேற்ற மாறும் குணம் பெரும் நன்மை தரும்.
சிம்மம்
- சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள், 2026 ஆம் ஆண்டில் அபரிமிதமான வளர்ச்சி மற்றும் நேர்மறையான மாற்றங்களை அனுபவிப்பார்கள்.
- ஒரு புதிய தொழிலைத் தொடங்குவதற்கோ அல்லது அவர்களின் தற்போதைய வேலையில் உயர் பதவிக்குச் செல்வதற்கோ வாய்ப்புகள் தேடிவரும்
- அவர்களின் தலைமைப் பண்புகளும் தன்னம்பிக்கையும் நிதி அவர்களின் வெற்றிக்கு வழிவகுக்கும்.
- 2026-ல் அவர்களின் தேடிவரும் பல சாதகமான வாய்ப்புகள் உங்கள் வாழ்க்கையின் திசையை முழுமையாக மாற்றும் என கூறப்படுகின்றது.




















