வரவிருக்கும் புத்தாண்டில் பல ஜோதிட மாற்றங்கள் ஏற்படும். புது வருடத்தின் தொடக்கத்திலேயே லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இந்த சக்திவாய்ந்த யோகம் சுக்கிரன் மற்றும் புதனால் உருவாகும்.
இது அவர்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. புதன் பிப்ரவரி 4 ஆம் தேதி கும்ப ராசிக்குள் நுழையும். சுக்கிரன் பிப்ரவரி 6 ஆம் தேதி கும்ப ராசியை அடைவார்.
மேலும் இந்த நேரத்தில், ராகு ஏற்கனவே கும்ப ராசியில் இருக்கிறார். இந்த மூன்று கிரகங்களும் இணைவதன் மூலம் திரிகிரஹி யோகமும் உருவாகிறது.
இதனுடன் லட்சுமி நாராயண ராஜ யோகமும் உருவாகிறது. இந்த ராஜ யோகங்களால் அதிர்ஷ்டம் ராசிகள் யார் என்பதை பார்க்கலாம்.
ரிஷபம்
இந்த இரட்டை ராஜயோகத்தின் பலனாக ரிஷப ராசிக்காரர்களின் வருமானம் அதிகரித்து, நிதி ஆதாயங்கள் குறிப்பிடத்தக்க அளவில் உயரும். இதுவரை சந்தித்த கஷ்டங்கள் நீங்கி, அவர்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணை நிற்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளதுடன், இந்த கிரக மாற்றம் புதிய முயற்சிகளை தொடங்கவும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இரட்டை ராஜ யோகம் பல நல்ல பலன்களை வழங்க உள்ளது. இதன் மூலம் வாழ்க்கையின் பல துறைகளில் முன்னேற்றம் காணலாம். வாழ்க்கை முறை மற்றும் நிதி நிலை மேம்படும். நீண்ட காலமாக காத்திருந்த பணிகள் நிறைவேறி, மனநிறைவும் திருப்தியும் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு திரிகிரக யோகம் மற்றும் லட்சுமி நாராயண யோகம் பல நன்மைகளை கொடுக்கும். ஒவ்வொரு சூழ்நிலையிலும் இரட்டைப் பலன் கிடைக்கும். இந்த சக்திவாய்ந்த ராஜ யோகம் தொழில் முன்னேற்றம், பதவி உயர்வு, சமூக மரியாதை மற்றும் நற்பெயர் அதிகரிப்பை உறுதி செய்யும். வேலையில் வெற்றி மற்றும் வணிக முன்னேற்றத்திற்கும் இது வாய்ப்பு தரும், வாழ்க்கையில் பல புதிய வாய்ப்புள் உருவாகும்.




















