ஐக்கிய தேசியக் கட்சி எந்த சின்னத்தில் பொதுத்தேர்தலில் போட்டியிட்டாலும் அது அரசாங்கத்திற்கு சவால் இல்லை என ராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சியின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்வி நன்றாக தெரிந்தது.
இதனால், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து நடத்திய அரசாங்கங்கள் அனைத்தும் தோல்வி என்பது செயற்பாட்டில் ஒப்புவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியை பற்றி பேசுவத பலன் தராத செயல் எனவும் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.