பேரனையும் நாட்டிற்காகவே பணி செய்ய அனுப்புவதாக புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரரின் தாயார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஸ்ரீநகரில் இருந்து ஜம்முகாஷ்மீருக்கு 2000க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் சென்றுக் கொண்டிருந்தபோது, புல்வாமா என்ற இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில், துணை இராணுவ படையினர் 40பேர் கொல்லப்பட்டனர். அதில், தமிழகத்தை சேர்ந்த சிவசந்திரன் என்ற துணை இராணுவ வீரரும் உயிரிழந்தார். அந்த தாக்குதலின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதனை அடுத்து புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு சிவந்திரனின் தாய் மற்றும் மனைவி பேட்டியளித்துள்ளனர்.
தாயார் அளித்துள்ள பேட்டியில் “எனது மகன் விடுமுறைக்கு வரும்போது வீட்டிலேயே இருப்பான். அவன் வீட்டில் இருப்பதே எனக்குப் பெரிய நிம்மதியாக இருக்கும். எனது இரு மகன்களையும் நாட்டிற்காக கொடுத்துவிட்டேன். அதனால் இப்போது கொள்ளி வைக்க கூட ஆள் இல்லை. இருப்பினும் எனது பேரனை நன்றாக படிக்க வைத்து நாட்டிற்கு சேவை செய்ய அனுப்புவேன்” என்றார்.
சிவசந்திரனின் மனைவி காந்திமதி பேசியதாவது “எனக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். எனது மகன் அப்பா எங்கே என்று கேட்கும் போது நான் கடவுளிடம் சென்றுவிட்டார் என்று சொல்வேன். ஆனால் அவனோ எனது கணவரின் கல்லறையை பார்க்கும் போது எல்லாம் அப்பா இங்கே தான் இருக்கிறார் என்று கூறுவான். எனது கணவருக்கு அவனை ஐ.பி.எஸ் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆகவே அவனை ஐ.பி.எஸ் படிக்க வைத்து இராணுவத்திற்கு பணிபுரிய அனுப்புவேன்” என்று கூறியுள்ளார்.