எதிர்வரும் பொதுத்தேர்தலில் முக்கியமான சில புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.
அந்தவகையில் தொழில்சார் நிபுணர்கள், விளையாட்டு நிபுணர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பெண் செயற்பாட்டாளர்கள் என பலரும் இதில் உள்ளடங்குகின்றனர்.
அத்துடன் வியத்மக, எலிய போன்ற அமைப்புகளின் செயற்பாட்டாளர்களுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவே முன்னணியின் வேட்பு குழு தலைவராக செயற்படுவார் என்றும், எனினும் அவர் கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் ஆலோசனைகளையும் உள்வாங்கியே அவர் முடிவுகளை எடுப்பார் எனவும் அறியக்கிடைத்துள்ளது.
இதன்படி தனக்கு நெருக்கமானவர்களின் பெயர் பட்டியலை ஜனாதிபதி, பஸில் ராஜபக்சவுக்கு அனுப்பவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை, ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் பலமானதொரு வேட்பாளரை களமிறக்க உத்தேசித்துள்ள நிலையில் , அதற்கான ஏற்பாடுகள் தற்போது மும்மரமாக இடம்பெற்றுவருவதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.