தமிழகத்தில் உறவினர்களால் சீரழிக்கப்பட்ட சிறுமி வழக்கு நடந்து வரும் நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திண்டிவனம் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த தம்பதி ரமேஷ்- கல்பனா, இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு எழுந்த நிலையில் தனித்தனியாக திருமணம் செய்து கொண்டனர்.
எனவே இரண்டு பிள்ளைகளும் தாய்வழி பாட்டி வீட்டில் வசித்து வந்தனர், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஒருநாள் இரண்டு சிறுமிகளில் ஒருவர் பள்ளியில் மயங்கி விழுந்துள்ளார்.
மருத்துவமனைக்கு அழைத்து சென்றதும் மருத்துவர்கள் விசாரித்ததில் உறவினர்கள் 16 பேர் சேர்ந்து அவரை சீரழித்தது தெரியவந்தது.
இதனையடுத்து பள்ளி நிர்வாகம் சார்பில் விழுப்புரம் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக சிறுமிகளின் சித்தப்பாக்கள் ரமேஷ், மகேஷ், உறவினர்கள் ரவிக்குமார், அருண் குமார், அஜித்குமார், பிரபாகரன், தீனதயாளன், பிரசாந்த், சிறுமிகளின் தாத்தா துரை, உறவினர் மோகன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதன் பின்னர் அடுத்தடுத்து மீதமுள்ள ஆறு பேரும் கைதாகினர். இவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதிலும் தீபாவளி சமயத்தில் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இதற்கிடையே கல்பனா தன்னுடைய பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்துவிட்டார்.
இங்கே இருவரில் ஏழு வயது சிறுமி கடந்த வியாழக்கிழமை திடீரென மயங்கிவிழ ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர், இதனை தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.