பாக்கு நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா ஆகியவற்றுக்கான கூட்டு நீரியல்வள முகாமைத்துவ அதிகாரசபை ஒன்று குறித்து இலங்கையின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த யோசனையை நல்ல விடயமாக கருதுவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் இந்த யோசனையை ஏற்றுக்கொண்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினர் அண்மையில் இந்தியாவுக்கு சென்றிருந்தனர்.
இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் உள்ளடங்கியிருந்தார். இதன்போது இரண்டு தரப்பினரும் இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தீர்க்கமாக கலந்துரையாடினர்.
இதன்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யோசனை முன்வைக்கப்பட்டது. இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களின் பிரச்சினை இன்று பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.
எனவே இதனை உடனடியாக தீர்த்துக்கொள்வதற்கே தாம் யோசனையை முன்வைத்ததாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


















