அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலை வாய்ப்பு திட்டத்திற்கு அமைவாக, பதுளை மாவட்டத்தில் பிரதேச செயலக வாரியாக விண்ணப்பித்தவர்களுக்கான கூட்டம் ஒன்று இன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் இதனை தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் 10.30 மணியவில் பதுளை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெறவிருக்கும் விசேட கலந்துரையாடலில் விண்ணப்பதாரிகள் தங்களது சுயவிபர கோவை மற்றும் தேசிய அடையாள அட்டை பிரதிகளுடன் சமூகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளது