ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இணை அனுசரணையில் இருந்து விலகிக்கொள்ளுமாறு தேசிய கூட்டுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை அமர்வின் போது இலங்கை அதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்று இந்தக்குழு கோரியுள்ளது.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள குழுவின் தலைவர் இளைப்பாறிய லெப்டினன்ட் கேர்னல் அனில் அமரசேகர, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தமது கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.
கடந்த மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் காலத்தில் 2015 ஒக்டோபர் முதலாம் திகதியன்று அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் இந்த இணை அனுசரணை மேற்கொள்ளப்பட்டது.
எனினும் ஐக்கிய நாடுகளின் ஜெனீவா அமர்வு பக்க சார்பானது என்ற அடிப்படையில் அமெரிக்காவும் அதிலிருந்து வெளியேறியுள்ளது.
இந்த நிலையில் இலங்கையும் இணை அனுசரணையில் இருந்து விலகிக்கொள்ள முடியும்.
இதேவேளை கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபயவுக்கு வடக்கு,கிழக்கு மக்களை தவிர்த்து 1.3 மில்லியன் மக்களின் அதிகப்படியான வாக்குகள் கிடைத்துள்ளன.
எனவே இந்த ஆதரவை வைத்துக்கொண்டு அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையின் ஜெனீவா அமர்வில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்று தேசிய கூட்டுக்குழு வலியுறுத்தியுள்ளது.